×

படப்பை – ஒரத்தூர் சாலையில் எலும்புக் கூடான மின் கம்பங்கள்: விபத்துக்கு முன் மாற்றியமைக்க கோரிக்கை

 

ஸ்ரீபெரும்புதூர், மே 27: படப்பை – ஒரத்தூர் சாலையில் எலும்பு கூடாக கட்சியளிக்கும் மின் கம்பங்களை விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள, வீடுகளுக்கும் படப்பை முதல் ஒரத்தூர் வரையில் சாலை ஓரமாக மின் கம்பங்கள் அமைக்கபட்டு, மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஒரத்தூரில் இருந்து படப்பை செல்லும் சாலையில் உள்ள 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், மின் கம்பங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும், கம்பிகள் துருப்பிடித்து பலம் இழந்து எலும்பு கூடுகள் போல் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக கோடை மழையின்போது பலத்த காற்று வீசினால், எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் மின் கம்பங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, சேதமடைந்து காணப்படும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post படப்பை – ஒரத்தூர் சாலையில் எலும்புக் கூடான மின் கம்பங்கள்: விபத்துக்கு முன் மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Patappai – Orathur road ,Sriperumbudur ,Patappai-Orathur road ,Kunradthur Union ,Orathur Panchayat ,Patapai – Orathur Road ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு