×

மனிகா புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா. அணியின் பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் மீது  பல்வேறு  குற்றசாட்டுகளை தெரிவித்திருந்தார். அதுகுறித்து விசாரிக்கப்போவதாக  இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்தது.இந்நிலையில்  கொரோனா பீதி காரணமாக தனிப் பயிற்சியாளரை வைத்து பயிற்சி மேற்கொள்வதாக மனிகா அறிவித்திருந்தார். ஆனால் அதை  கூட்டமைப்பு ஏற்கவில்லை. அதனால் பயிற்சி முகாமுக்கு வரவில்லை என்று கூறி சமீபத்தில் அறிவிக்கபட்ட ஆசிய சாம்பியன்ஷிப் சர்வதேச போட்டிக்கான அணியில்  மனிகாவை சேர்க்கவில்லை.இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனிகா வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், ‘இனி சர்வதேச போட்டிகளுக்கான வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்ய தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்பதை கட்டாயமாக்க கூடாது. மேலும் கூட்டமைப்பு, பயிற்சியாளர் குறித்து மனிகா கொடுத்த புகாரை மத்திய அரசு விசாரித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி  ரேகா பள்ளி  உத்தரவிட்டார்….

The post மனிகா புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Manika ,New Delhi ,India ,Manika Patra ,Dinakaran ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...