×

மறைமலைநகர் பன்னாட்டு தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு, மார்ச் 31: செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட வல்லாஞ்சேரி, பொத்தேரி, நின்னகாட்டூர், மறைமலைநகர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், செங்குன்றம், கடம்பூர், கலிவந்தப்பட்டு, என்.எச்.1,என். எச்.2, பாவேந்தர் சாலை, பெரியார் நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர்  உள்பட 21 வார்டுகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று, நகர  திமுக செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாார். அப்போது அவருக்கு கட்சியினர், பொதுமக்கள், பெண்கள்  பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. திமுக தேர்தல் அறிக்கையில், மாணவர்கள், பெண்களுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் உதவித்தொகை, அரசு வேலைகளில் 40 சதவிகிதம் முன்னுரிமை சலுகை, மகளிர் சுயதொழில் தொடங்க தாராளமான சுழல்நிதி, வங்கி கடன் வசதி என எண்ணற்ற திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

என்னை செங்கல்பட்டு தொகுதியில் மீண்டும் வெற்றிபெற வைத்தால், மறைமலைநகர் நகராட்சி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படும். நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பாதாள சக்கடை திட்டம் அமல்படுத்தி நிறைவேற்றப்படும்.  நகராட்சியின் மையப்பகுதியில் உள்ள நின்னகரை ஏரியில், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை முழுமையாக தடுத்து, ஏரியை துர்வாரி ஆழப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றுவேன். நகரில் செயல்படும் பன்னாட்டு தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்பு  கிடைக்க ஏற்பாடு செய்வேன். நகராட்சி பகுதியில் அனைத்து அரசு திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றார்.

பிரசாரத்தில், முன்னால் எம்எல்ஏ டி.மூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆல்பர்ட், நகர திமுக நிர்வாகிகள்  முரளி, லல்லி முரளி, முத்து, யுவராஜ், தர், அரங்ககிரி சந்திரன், சின்னையா, ஜெயகுமார், மனோகரன் விமல்குமார், நகர இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே.கமலகக்கண்ணன், சுப்பிரமணி, செந்தில், பழனி, நித்யா, திலீப், மகளிரணி இந்திரா, வினோத்குமார், ஆனந்தபாபு, ஏழுமலை, பெருமாள், குமரகுரு, மாவட்ட பிரிதிநிதி கருணாநிதி, குமரன், பெரியார் நகர் பரணி, சிவபிரகாஷ், சுரேஷ்குமார், விக்கி, முரளி, எஸ்.சுப்பிரமணி, தனசேகர், வெங்கட், முருகேசன், சங்கர், சீனுவாசன், குணசேகரன், மணிகண்டன், அசோகன், யுவராஜ், கே.ஜி,உதயகுமார், பார்த்தசாரதி, ரவி, காங்கிரஸ் நகர தலைவர் தனசேகர், மதிமுக நகர செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி சண்முகம், இந்திய கமாயூனிஸ்ட் நிர்வாகி வீராசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன்,  தொகுதி செயலாளர் தென்னவன், நகர நிர்வாகிகள் திருகாந்தன், வீரா, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தாவுத், ஆதாம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஹதர்அலி, அன்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Maraimalai Nagar ,
× RELATED மறைமலைநகரில் குடோனில் பதுக்கி வைத்த...