வெயில் கொளுத்தி வரும் நிலையில் விருதுநகரில் கொடிக்காய் விற்பனை விறுவிறு மருத்துவக் குணத்தால் பயன்பாடு அதிகரிப்பு கிலோ ரூ.200 முதல் ரூ.280 வரை கிடைக்கிறது

விருதுநகர், மார்ச் 31: வெயில் கொளுத்தி வரும் நிலையில், விருதுநகர் மார்க்கெட்டில் கொடிக்காய் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. கிலோ ரூ.200 முதல் ரூ.280 வரை விற்பனை செய்யப்படுகிறது.  கிராமங்களில் கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என அழைக்கப்படும் காய், 20 ஆண்டுகளுக்கு முன் விலையின்றி ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வழங்கப்பட்டது. மருத்துவ குணங்களால் கடந்த சில ஆண்டுகளாக கொடிக்காய் பிரபலமாகி வருகிறது. பிப்.முதல் மே மாதம் வரை கொடிக்காய் பழம் விற்பனைக்கு வருகிறது. இனிப்பு, துவர்ப்பு அல்லது இரண்டும் கலந்த சுவை உடையது. விருதுநகர் மார்க்கெட்டிற்கு தாதம்பட்டி, மருளுத்து, மீசலூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விருதுநகர் மக்கள் கொடிக்காய் பழத்தை அதிக அளவில் வாங்கி உண்பதால், தினசரி 300 கிலோ வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ கொடிக்காய் ரூ.200 முதல் ரூ.280 வரை விலை போகிறது. இந்த பழத்தை மூன்று நாட்கள் அறையின் வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தலாம்.

Related Stories:

>