மாதவரம் மண்டலம் 31வது வார்டில் மாதவரம் மூர்த்தி பிரசாரம்

திருவொற்றியூர், மார்ச் 30: மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, மாதவரம் மண்டலம் 24 மற்றும் 31வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து, வெற்றிபெற வாழ்த்தினர். அப்போது மாதவரம் வி.மூர்த்தி மக்கள் மத்தியில் பேசுகையில், ‘நான் அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியில் சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தேன். மீண்டும் நான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மழைநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருவேன். தற்போது அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளும் உங்கள் வீடு தேடி வரும். இந்த தொகுதியில் கலை கல்லூரியை கொண்டு வருவேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்,’ என்றார். திரைப்பட நடிகர் சுரேஷ், முன்னாள் மண்டல குழு தலைவர் வேலாயுதம், முன்னாள் வட்ட செயலாளர் குமரவேல் மற்றும் அதிமுக, பாஜக, பாமக போன்ற கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

>