கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாரம் ஒரு முறை மக்கள் குறைதீர் கூட்டம்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி

கும்மிடிப்பூண்டி, மார்ச் 30: கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில் பூவலம்பேடு, பெரியபுலியூர், சிறுவாடா, குருவராஜகண்டிகை உள்ளிட்ட ஊராட்சிகளில் பிரசாரம் செய்தார்.

இதில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் பாஸ்கரன், திருமலை, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதாமுத்துசாமி, மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஜி.மனோகரன், து.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் துளசி நாராயணன், ராஜேந்திரன், ரவிக்குமார் காங்கிரஸ் வட்டார தலைவர் பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நேசகுமார் , வழக்கறிஞர் தமிழ்செல்வன், இலக்கிய அணி நிர்வாகி திருநாவுக்கரசு, முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பூவலம்பேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலபதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவி புனிதவள்ளி, திமுக நிர்வாகி ஜோதிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பாசம் அன்பு, சிறுவாடா, பெரியபுலியூரில் மாவட்ட கலை இலக்கிய நிர்வாகி புருஷோத்தமன், எருக்குவாயில் மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாட்டில் வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து குருவராஜகண்டிகை ஊராட்சியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.சூரவாரிகண்டிகை ஆர்.ராஜேஷ், பாலசுப்பிரமணியராஜா யுகேந்தர், ஊராட்சி தலைவர் ரவி, திமுக வழக்கறிஞர் சுரேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் ஏற்பாட்டில் பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த நிலையில் வீதி வீதியாக நடந்து சென்று திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கூறுகையில், “தொகுதி மக்களின் பிரச்னையை தீர்க்கும் வகையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாரம் ஒரு நாள் ஒரு பொதுவான பகுதியில் மக்கள் குறை தீர் கூட்டம் நடத்தப்பட்டு தொகுதி பிரச்னை அடிக்கடி தீர்க்கப்படும். கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3 மாதத்திற்கு ஒரு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்,” என்று உறுதி அளித்தார். பிரசாரத்தில் திமுக நிர்வாகி தம்புரெட்டிபாளையம் ரமேஷ், நாகராஜ், அருள், பல்லவி ரமேஷ், தேர்வாய் சிவ.இளங்கோ, எகுமதுரை மஸ்தான், மனோகரன், மங்களம் சுரேஷ், மாரிமுத்து, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>