×

வேலாண்டிபாளையம் பகுதியில் சிறு,குறு தொழில் முன்னேற வழிவகுப்பேன்

கோவை,மார்ச்30: கோவை வடக்கு தொகுதியில் மதசார்பற்ற ஜனநாயக தேசிய முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில்  போட்டியிடும் வடவள்ளி வ.ம.சண்முக சுந்தரம் நேற்று வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாண்டிபாளையம், கோவில்மேடு ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது; உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்.  நான் இதே பகுதியை சேர்ந்தவன். வடவள்ளி பேரூராட்சியின் தலைவராக 3 முறை நானும், ஒரு முறை எனது மனைவியும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றி உள்ளோம். அடிப்படை தேவைகள் குறித்து அறிந்து அதனை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.
எந்நேரமானாலும் என்னை தொடர்பு கொள்ள முடியும். திமுக தலைவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சி பொறுப்பேற்றவுடன் இல்லத்தரசிகளுக்கு உரிம தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நகர பேருந்தில் இலவ பயணம் மேற்கொள்ளலாம். பெட்ரோல்,டீசல்,பால் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். வேலைவாய்ப்பினை பெருக்கிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
 
வேலாண்டிபாளையத்தில் சிறு,குறு தொழில் வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். நம்பிக்கையுடன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் இவ்வாறு வேட்பாளர் வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம் வாக்கு சேகரித்தார். நேற்று ஒரே நாளில் கலாமன்றம்,நல்லம்மாள்வீதி,திலகர்வீதி,பாரதியார் வீதி, தடாகம் வீதி வழியாக காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின் போது திமுக சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் ரவி, பகுதி செயலாளர் கிருஷ்ணராஜ்,வட்ட செயலாளர் குணசேகரன்,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி,துரைசாமி,மோகன்குமார், வைகோ பழனிச்சாமி,மதிமுக மாவட்ட செயலாளர் மோகன்குமார், காங்கிரஸ் ஆறுமுகம், கம்யூனிஸ்ட் சேட்டு(எ) பாலசுப்பிரமணியம்,ஆதி தமிழர் பேரவை அகிலன்,காந்திநகர் சுந்தர்ராஜ்,ராஜேந்திரன்,கருப்பண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Tags : Velandipalayam ,
× RELATED ப்ரிட்ஜ், வாசிங் மெஷின் எரிப்பு; வாலிபர் கைது