×

கல்லுப்பட்டி பகுதியில் அமைச்சர் உதயகுமார் தேர்தல் பிரசாரம்

திருமங்கலம், மார்ச் 30: திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேற்று டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சிலைமலைப்பட்டி, பாப்புரெட்டிபட்டி, சொக்கலிங்காபுரம், பொக்கலாப்பட்டி, ராமநாதபுரம், எம்.சுப்புலாபுரம், எம்.செங்குளம், சிலார்பட்டி, கே.சத்திரபட்டி, கிளாங்குளம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வீடு தோறும் 6 காஸ் சிலிண்டர்கள், வாசிங்மெசின் இலவசம், வீட்டிற்கே ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.

கொரோனா காலத்தில் தொகுதி முழுவதும் அரிசி தொகுப்பு, கோதுமை தொகுப்பு வழங்கினேன். மேலும் கபசுர குடிநீர் வழங்கினேன். தற்போது இரண்டாவது முறையாக திருமங்கலம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். திருமங்கலம் தொகுதியில் குடிநீர் பிரச்னை இல்லை. அனைத்து பகுதிக்கும் சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றியுள்ளேன். இதுபோன்ற திட்டங்கள் தொடர வரும் தேர்தலில் எனக்கு ஆதரவு தரவேண்டும் என பேசினார்.அமைச்சருடன் அவரது மகள் பிரியதர்சினி, முன்னாள் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சேர்மன் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Udayakumar ,Kallupatti ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...