×

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் அணைகள் கட்டப்படும் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ வாக்குறுதி

கொடைக்கானல், மார்ச் 30: பழநி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, கொடைக்கானலில் மேல் மலைப்பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மதசார்பற்ற கூட்டணி மக்களுக்கான ஆட்சியை கண்டிப்பாக தரும். கலைஞரின் பிறந்த நாளில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி என்று எடப்பாடி பழனிச்சாமி 12 ஆயிரத்து 110 கோடி அறிவித்துவிட்டு, 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளார். பாக்கியுள்ள கடன் தொகைகள் திமுக ஆட்சி வந்தவுடன் ரத்து செய்யப்படும். விலைவாசி உயர்வு விண்ணை எட்டியுள்ளது.

சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துவிட்டது. மானியம் தருகிறேன் என்று சொன்னாரே மானியம் வந்ததா. மேல் மலைப்பகுதிகளில் நான்கு ஊராட்சி பகுதிகளுக்கு 5 அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியில் குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தங்கப்பாண்டி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : IP ,Senthilkumar ,MLA ,Kodaikanal ,
× RELATED சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்