×

அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் உடன்குடியில் பாலிடெக்னிக் அமைக்க நடவடிக்கை கனிமொழி எம்.பி உறுதி

உடன்குடி,மார்ச் 30: உடன்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என உடன்குடி பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து கனிமொழி எம்பி பேசினார். திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதாராதாகிருஷ்ணனை ஆதரித்து உடன்குடி மெயின் பஜாரில் கனிமொழி எம்பி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குடியுரிமைச்சட்டம், வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு இப்போது இந்த சட்டங்களை திரும்ப பெற அழுத்தம் கொடுப்போம் என கூறுகின்றனர். அதிமுக கடந்த தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை.
 திமுக ஆட்சி அமைந்தவுடன் கொரோனா காலங்களில் வழங்காமல் உள்ள ரூ4ஆயிரத்தை கலைஞர் பிறந்த நாளில் வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். உடன்குடி பகுதிக்கு ஏராளமான பல நல்லத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில் தான்.  உடன்குடியில் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும், நாசரேத்தில் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும். உடன்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க அமைக்க நடவடிக்கைப்படும். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வினால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில திமுக மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்  எஸ்.ஜெ.ஜெகன், யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான பாலசிங், நகர செயலாளர் ஜாண்பாஸ்கர், மாவட்ட அமைப்பாளர்கள் சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு ராஜேஷ், நெசவாளர்அணி மகாவிஷ்ணு, இளைஞரணி ராமஜெயம், மகளிரணி ஜெஸிபொன்ராணி, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, மாணவர் அணி முகைதீன், அமிர்தா மகேந்திரன், இளைஞர் அணி அஸ்ஸாப், சிறுபான்மைநல உரிமைப்பிரிவு சிராசுதீன், யூனியன் துணைச்சேர்மன் மீரா, செட்டியாபத்து பஞ்.,தலைவர் பாலமுருகன், யூனியன் முன்னாள் கவுன்சிலர் பிரபாகர்முருகராஜ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சலீம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், நகர தலைவர் முத்து, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள்தலைவர் முத்துகுமார், மமக மாவட்ட தலைவர் ஆசாத், தென்மண்டல விசிக அமைப்பாளர் தமிழினியன், ஒன்றிய செயலாளர் சங்கர், ஒன்றிய மதிமுக செயலாளர் இம்மானுவேல், ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் ஆண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi ,Anita Radhakrishnan ,Polytechnic ,Udankudi ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...