×

வைப்பார் கோயில் திருவிழா

குளத்தூர்,மார்ச் 30: வைப்பார் ராஜமுனீஸ்வரர்கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு கறிவிருந்து நடந்தது. வைப்பார் ராஜமுனீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை சாமியாடிகள் அருகிலுள்ள சிப்பிகுளம் கடலில் புனிதநீராடி தீர்த்தகுடங்களில் தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வைப்பார் கிராம முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து ராஜமுனீஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைநடந்தது.

இரவு சாமியாடிகள் வேட்டையாடுதல், ஊட்டு கொடுத்தால் என சாம பூஜை நடந்தது. நேற்று காலை கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் நேர்ச்சையாக விடப்பட்ட கிடாய்களை ராஜமுனீஸ்வரருக்கு பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து அதிகாலை சிறப்புபூஜைகளுடன் பக்தர்களுக்கு கறிவிருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி பொன்ராஜ் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Vaipar Temple Festival ,
× RELATED முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும்...