சேதமான பெயர் பலகையை மாற்ற நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

புதுக்கோட்டை, மார்ச் 30: புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடிமியான்மலை, திருமயம் கோட்டை, ஆவுடையார்கோவில், பொற்பனைகோட்டை, திருவரங்குளம் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. உலக நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதபோல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கஜா புயல் காரணமாக அனைத்து மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் பல இடங்களில் மரங்களின்றி வெறுச்சோடி காணப்பட்டது. தற்போது சாலை ஓரங்களில் மரக்கண்றுகள் வைத்தனர். ஆனால் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

புயலின்போது சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பெருவாரியான பெயர் பலகைள் கீழே விழுந்தும், சில இடங்களில் காற்றில் அடித்தும் சென்றுள்ளது. இதனால் வெளியூர் பயணிகள், சுற்றுழா பயணிகள், வெளியூர் வகான ஓட்டிகள் புதுக்கோட்டையில் இருந்து எந்த ஊருக்கு எப்படி செல்ல முடியும் என்பது தெரியாமல் சிறமப்படுகின்றனர். சில நேரங்களில் தெரிந்தவர்களிடம் போனில் தொடர்ப்பு கொண்டு அவர்கள் சொல்லும் வழியில் வந்து செல்கின்றனர்.

கஜா புயலுக்கு பிறகு நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகை குறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுற்றுழா பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிறமங்களை சந்தித்து வருகின்றனர். புயலில் கிழே விழுந்த பெயர் பலகைகளை மீடக்காமல் அப்படியே விட்டதால் சாலைகளில் விழுந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதனால் இனியாவது விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>