×

அடித்து கொலையா? பெற்றோர் புகாரால் பரபரப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் அறிவுறுத்தல் 2 பேர் மீது வழக்குப்பதிவு 12 வகையான அடையாள அட்டைகளில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்

பெரம்பலூர்,மார்ச் 30: வாக்காளர்கள் 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிலுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம்.

அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட்கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன்கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம். எந்தஒரு வாக்காளரும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் தகவல் சீட்டைமட்டும் கொண்டு வாக்களிக்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Sensational ,
× RELATED திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு...