×

அரியலூர் மாவட்டத்தில் சளி, கழிச்சல், வாய்ப்புண்ணால் அதிகளவில் ஆடுகள் உயிரிழப்பு கண்டுகொள்ளுமா கால்நடை துறை?

அரியலூர், மார்ச் 30: அரியலூரில் மாவட்டத்தில், கழிச்சல் நோய் காரணமாக அதிகளவில் ஆடுகள் உயிரிழப்பதால் கால்நடை துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்கள், மேய்யச்சல் நிலங்கள் ஒட்டிய நீரோடை பகுதிகள் குக்கிராமங்களில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு அதிகளவில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது ஆடுகளுக்கு சளி பிடித்தும், காய்ச்சல், வாய் முதல் குடல் புண் ஏற்பட்டு, உணவு உண்ண முடியாமலும், கழிந்து, நிற்க கூட முடியாமல் சில நாட்களில் உயிரிழந்து விடுகின்றன. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஆடுகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதில் நாச்சியார்பேட்டை, வெண்மான்கொண்டான் மற்றும் செந்துறை தாலுகாவிற்குற்பட்ட மத்துமடக்கி, வீராக்கன், பிலாக்குறிச்சி, செதலாவாடி, சிறுகடம்பூர் கிராமங்களில் இதுவரை 200க்கும் அதிகமான ஆடுகள் உயிரிழந்துள்ளன. நோய் பரவாமலிருக்க பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிடமிருந்து தனித்தும், இறந்தவற்றை புதைத்தும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திறக்காக வளர்க்கப்படும் கொத்துக்கொத்தாக உயிரிழப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். கால்நடைத்துறையினர் உரிய ஆய்வு நடத்தி ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Ariyalur district ,
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...