திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல், ராசிபுரத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நாமக்கல், மார்ச் 29: நாமக்கல், ராசிபுரத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் இன்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல் திமுக வேட்பாளர் ராமலிங்கம், ராசிபுரம் வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன், சேந்தமங்கலம் வேட்பாளர் பொன்னுசாமி ஆகியோரை ஆதரித்து, பொதுமக்களிடம் இன்று (29ம்தேதி) பிரசாரம் செய்கிறார். இன்று காலை 10 மணிக்கு ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலும், 11 மணிக்கு ஜிபி வேவ் பிரிட்ஜ் அருகிலும், காலை 11.30 மணிக்கு அலங்காநத்தம் பிரிவு ரோடு, 12 மணிக்கு நாமக்கல் பூங்கா சாலை ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இத்தகவலை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>