×

குருத்தோலை தினத்தில் கிறிஸ்தவர்களிடம் அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


கம்பம், மார்ச் 29: தேனி மாவட்டம், கம்பம் தொகுதி அமமுக வேட்பாளர் சுரேஷ், சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளான சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, காமட்சிபுரம், எரசை ஆகிய ஊர்களிலும், உத்தமபாளையம் பேருராட்சியிலும் கடந்த 15 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து கம்பம் பகுதிக்கு வந்த அமமுக வேட்பாளர், தான்  சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய திட்டங்கள் குறித்து துண்டுபிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறு திருநாளில் கம்பம் சி.எஸ்.ஐ.சர்ச்சில் கிறிஸ்துவர்களிடம் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அம்மா பேரவை மாநில துணை தலைவர் ஸ்டார் ரபீக், அமமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் குமரன், நகரச் செயலாளர் ராஜமணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் இராமர், துணைச் செயலாளர் சாதிக், மாவட்ட பிரதிநிதி சாமாண்டி சாகுல் ஹமீது, இணை செயலாளர் கருப்பையா மற்றுக் டேவிட் அன்பையா, நகர பொறுப்பாளர் நாகராஜ், மகளிர் அணி நகர செயலாளர் சாந்தி மற்றும் எஸ்டிபிஐ சார்பில் நகர தலைவர் சிராஜ்தீன், செயலாளர் தாவூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அலி, 15வது வார்டு செயலாளர் பைசல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Christians ,Epiphany Day ,
× RELATED பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது...