×

வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு மது எடுத்து செல்ல தடை: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, மார்ச் 29: சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாட்களில், டாஸ்மாக் கடைகளுக்கு மது பானங்கள்  கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்ட அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு (ஏப்.6), வாக்கு எண்ணிக்கை (மே 2)  ஆகிய நாட்களில் தமிழ்நாடு வாணிப கழகம் (TASMAC) மற்றும் IMFS பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்களை மாவட்ட கிடங்கில் இருந்து, டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஏப்.4ம் தேதி காலை 10 மணிமுதல் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி.வரை, வாக்கு எண்ணும் நாளான(மே 2) அன்று முழுவதும் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmac ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்