×

வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்ததால் விவசாயிகள் மத்தியில் திருத்தணி திமுக வேட்பாளருக்கு பெரும் வரவேற்பு

பள்ளிப்பட்டு, மார்ச் 29: விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கிய, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளால் திருத்தணி திமுக வேட்பாளருக்கு  விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை  ஊக்கப்படுத்தி,  விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில்  திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில்  விவசாயத்திற்கு தனி பட்ஜெட், நெல் டன் ஒன்றுக்கு ஆதார விலையாக ₹ 2500, கரும்பு டன்னுக்கு ₹ 4 ஆயிரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் விவசாயிகளை பெருதும் கவர்ந்துள்ளது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும்  திருத்தணி எஸ்.சந்திரனுக்கு தொகுதி முழுவதும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு ஆதரவு பெருகி வருகின்றது.

இந்நிலையில், நேற்று ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் விவசாயிகள் நிறைந்த  ராகவநாயுடுகுப்பம், ஜனகராஜகுப்பம், பாலாபுரம், வீரமங்கலம், மகன்காளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சென்ற திமுக வேட்பாளர் எஸ்.சந்திருக்கு  மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் தலைமையில்  கிராமம் கிராமமாக விவசாயிகள்  உற்சாகமாக வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது, விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால் பேசுகையில்,  ‘அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரும்பு நிலுவை தொகை கடந்த 4 ஆண்டுகளாக வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால், பெரும் நஷ்டம் எற்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கு  உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

அதில், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், நெல், கரும்பு ஆதார விலை நிர்ணயம், நீர் நிலைகள்  தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீர் சேமிப்பு, தொகுதி அளவில் மக்கள் குறை தீர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதிகள் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  எனவே, சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு விவசாயிகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு தந்து வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார். இதில், நெசவாளரணி மநில துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, சி.ஜெ.சீனிவாசன், மாவட்டபொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் டி.எம்,சுகுமாரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி,  எஸ்.எம்.ரவி, சி.எம்.ரவி, எஸ்.ஆர்.செங்குட்டுவன், அம்பேத்கர், தருமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி, ஆனந்தி செங்குட்டுவன், வி.ஜி.மோகன், மு.சித்ரா கணேசன், ராஜேந்திரன், கவுன்சிலர்கள் உமாபதி, திலகவதி ரமேஷ், அம்முசேகர், காங்கிரஸ் நிர்வாகிகள் சுந்தரவேல், தங்கவேல், சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சாமுவேல், வாசு உட்பட திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : DMK ,Thiruthani ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி