×

சத்தியமங்கலம் அருகே சூறாவளிக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதம்

சத்தியமங்கலம், மார்ச்26: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி,கொத்தமங்கலம்,ராஜன்நகர்,புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு கதலி, நேந்திரன், ஜி 9, செவ்வாழை, தேன் வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழை பயிரிடப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் புதுவடவள்ளி, ராஜன் நகர், காந்திநகர், பட்டரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சுமார் 10 நிமிடம் வீசிய சூறாவளி காற்றில் ராஜன் நகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மூர்த்தி வேல், தேவராஜ் பிரபு, மாதேஷ்குமார், காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்ராஜ், துரைசாமி, மூர்த்தி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் சுமார் 5 ஆயிரம் வாழைகள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து வாழையை அறுவடைக்கு தயார் செய்த நிலையில் சூறாவளி காற்று வீசி வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் அரசு கணக்கெடுப்பு செய்து சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Satyamangalam ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு