×

தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் உறுதி

திருவாரூர், மார்ச் 26: தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில் தோட்டச்சேரி, கம்பர் தெரு, புளியங்குடி, அண்ணா காலணி, கமாலியா தெரு, குணுக்குடி, ஜமாலியா தெரு, ரஹ்மானியா தெரு, பண்டுதக்குடி, மரக்கடை, லெட்சுமாங்குடி கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி திமுக தலைமையிலான மக்களாட்சி அமைந்திட அனைவரும் உதயசூரியனுக்கு ஆதரவளிக்க வேண்டும். மேலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு திமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.
மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் அளிக்கப்படும். குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்ற பல்வேறு அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். செய்வதை மட்டுமே சொல்லும் இயக்கம் திமுக. எனவே அனைவரும் உதயசூரியனை ஆதரித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.
இந்த பிரசாரத்தின்போது திமுக நகர செயலாளர் காதர்உசேன் மற்றும் கட்சியினர் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur ,DMK ,Boondi Kalaivanan ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்