திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு திருச்செந்தூரில் விசிக சிறப்பு செயற்குழு

திருச்செந்தூர், மார்ச் 26:   தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், திருச்செந்தூர்  தொகுதி  திமுக வேட்பாளரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.கூட்டத்தில் விசிக மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, மண்டல செயலாளர் தமிழினியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் அரசூர் ராஜ்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாநில துணைச்செயலாளர் நாராயண் அய்யர், மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் மங்கை சேகர், தொகுதி செயலாளர்கள் திருச்செந்தூர் வெற்றிவேந்தன், வைகுண்டம் திருவள்ளுவன், திமுக ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ், திமுக நகரச் செயலாளர் வாள் சுடலை, திமுக மாநில பொறுப்பாளர் உமரிசங்கர், விசிக ஒன்றியச் செயலாளர்கள் திருச்செந்தூர் சங்கத்தமிழன், உடன்குடி தமிழ்வாணன், ஆழ்வார்திருநகரி துரை, மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்செல்வி, மணப்பாடு டிலைட்டா, விசிக நகரச் செயலாளர்கள் திருச்செந்தூர் உதயா, உடன்குடி தவ்பிக் அன்சாரி , காயல்பட்டணம் அல்லமீன், ஆறுமுகநேரி வெள்ளத்துரை, தென்திருப்பேரை அய்யப்பன், நாசரேத் பாஸ்கரதாஸ், கானம் துரை, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>