×

விகேபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் ஆவுடையப்பனை ஆதரித்து எர்ணாவூர் நாராயணன் பிரசாரம்

வி.கே.புரம், மார்ச் 26: அம்பாசமுத்திரம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சிவந்திபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் அம்பை திமுக வேட்பாளர் ஆவுடையப்பனை ஆதரித்து சமக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வாக்குகள் சேகரித்தார். அம்பை தொகுதி திமுக. வேட்பாளர் ஆவுடையப்பனை ஆதரித்து சிவந்திபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட சிவந்திபுரம் கஸ்பா, உதிரமுத்தன்பட்டி, எம்.ஜி.ஆர் தங்கநகர், புலவன்பட்டி, அம்பலவாணபுரம், வராகபுரம்,ஆறுமுகம்பட்டி போன்ற பகுதிகளில் சமக நிறுவனர்  எர்ணாவூர் நாராயணன் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதனை தொடர்ந்து விகேபுரத்தில் பசுக்கிடைவிளை, அருணாசலபுரம்,அகஸ்தியர்புரம், கோட்டைவிளைப்பட்டி மற்றும் விகேபுரத்தில்  வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்ச்சியில் தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், சங்க இயக்குனர் எஸ்.ஆர் வைத்திலிங்கம், திமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி ஜான்நிக்கல்சன், அம்பை
ஒன்றிய செயலாளர் பரணிசேகர், விகேபுரம் நகர செயலாளர் கணேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நெடுஞ்செழியன், சிவந்திபுரம் திமுக செயலாளர்கள்  செல்வம், முருகேசன், காங்கிரஸ் சங்கரநாராயணன், செல்வம், இ. கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நமச்சிவாயம், மா.கம்யூ ரெபாக்காள், மதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரைபாண்டியன், உட்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Tags : Ernavur Narayanan ,DMK ,Audayappan ,Vikepuram ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி