×

கொப்பரை தேங்காய் மூலப்பொருட்களில் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை முகமது அபூபக்கர் வாக்குறுதி

கடையநல்லூர், மார்ச் 26: கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முஹம்மது  அபூபக்கர், செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சியில் முக்கிய பிரமுகர்கள், ஊர்நாட்டாமைகளை சந்தித்ததுடன் சீவநல்லூர், இலத்தூர், திருவெற்றியூர், அச்சன்புதூர், பார்வதிபுரம், கடையநல்லூர்  ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவயல், காசிதர்மத்தில் ஏணி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். செங்கோட்டைஒன்றியத்திற்கு தொகுதி  நிதியிலிருந்து பல்ேவறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். கடையநல்லூர் தொகுதியில் கொப்பரை தேங்காய் மூலப்பொருட்களை கொண்டு பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை, கொப்பரை தேங்காய்களை காய வைப்பதற்காக மின்உலர்சாதன வசதி, இலத்தூர் சனீஸ்வரர் கோயிலில்  புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரசாரத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், ராமையா, அணி அமைப்பாளர்கள் இளைஞரணி ஆறுமுகச்சாமி, மாணவரணி வக்கீல் வெங்கடேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், முத்துவேல், விவசாய அணி சாமித்துரை, தங்கம்,  வெள்ளத்துரை, பரமசிவன், சாமி, சோமசுந்தரம், ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், காங்கிரஸ் சட்டநாதன், பண்டாரம், புனமாலை, துரைராஜ், சீனிபாண்டியன், ரத்தினம்,  மதிமுக முருகன், சிபிஎம் மாரியப்பன், வேலுமயில், கணபதி, சிபிஐ சுப்பையா, முஸ்லிம்லீக் மாநில செயலாளர் ஜீவகிரிநாதன், முகம்மதலி, செய்யது சுலைமான், வாசு, முத்துராமன், பரமசிவம், உக்காசிம் மைதீன், ரிசவுமைதீன், ரிசாய், பீர்மைதின் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Mohammad ,Abubakar ,
× RELATED சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக...