திருப்பரங்குன்றம் தொகுதிக்கான திட்டம் எதுவுமே அறிவிக்கவில்லை முதல்வர் பிரசாரத்தில் மக்கள் ‘அப்செட்’

திருப்பரங்குன்றம், மார்ச் 26: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். தொகுதியை பற்றி முதல்வர் பேசுகையில், ஒரு சில மேம்பாட்டு திட்டங்களை மட்டுமே குறிப்பிட்டார். ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதியின் முக்கிய விவசாய தொழிலான மல்லிகைப்பூ பற்றியோ அதனின் பதனிடும் தொழில், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, சென்ட் பேக்டரி போன்றவை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரம் உயர்த்துவது, தொழிற்பேட்டைகள் அமைப்பது, தென்மாவட்ட மக்களின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை, வடபழஞ்சி ஐடி பூங்கா, பெயரளவில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவது, போக்குவரத்து நெரிசல், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் சென்று விட்டார். இது தொகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>