சட்டமன்ற தேர்தலையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை, மார்ச் 25: தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிட். சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் ஏப்.6ம் தேதி தமிழ்நாடு சட்டமன் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உரிய வாக்கு மையத்தில் பதிவு செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட்., பொதுமக்கள் எளிதாக எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வரும் ஏப்.4,5 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் திருச்சியிலிருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வரும் ஏப்.1ம் தேதி முதல் 8ம் தேதி வரை அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்து இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஏப்.4ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வரும் ஏப்.6,7,8 ஆகிய நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிட். மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>