×

திமுக தேர்தல் அறிக்கையை விளக்கிகூறி வேட்பாளர் நிவேதாமுருகன் வாக்குசேகரிப்பு

மயிலாடுதுறை, மார்ச் 25: பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் திமுக தேர்தல் அறிக்கையை கூறி பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உடன் சென்று ஆதரவு திரட்டினர். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் மற்றும் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட ஏராளமானோருடன் ஆகியோருடன் நேற்று செம்பனார்கோவில் அருகில் உள்ள மருதம்பள்ளத்தில் வாக்குகள் சேகரித்தனர். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கை நகலை பொதுமக்களுக்கு வழங்கி, அவற்றை விளக்கிகூறி வாக்கு கேட்டனர். காளமநல்லூர், கிடங்கல், மாமாகுடி மற்றும் ஆக்கூர் பகுதிகளில் சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக திரளான இளைஞர்களும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆக்கூரில் நிவேதாமுருகன் பேசுகையில், திமுக அரசு பதவியேற்றதும் பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 குறைக்கப்படும். மின்கட்டணம் மாதம் ஒருமுறை கணக்கிடப்படும். மேலும் மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை உயர்த்திக்கொண்டே வருகிறது, ரூ.410ல் இருந்த விலை தற்பொழுது ரூ.820 ஆகியுள்ளது. மத்திய அரசு தரும் மான்யத்தையும் குறைத்துவிட்டது. ஆகவே திமுக தலைவர் இதைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தற்பொழுது ரேஷன் கடைகளில் வழங்கும் சர்க்கரை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் மாதந்தோறும் மேலும் ஒரு கிலா சர்க்கரை வழங்கப்படும். அதிமுக அரசால் நிறுத்தப்பட்ட உளுந்து மீண்டும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என திமுக தலைவர் அறிவித்துள்ளார் என பேசினார். ஆக்கூரில் வாக்கு கேட்டுச்சென்ற வேட்பாளர் அங்கிருந்து காளகஸ்திநாதபுரம், முக்கரும்பூர், அன்னவாசல் மற்றும் இளையாளூரில் வாக்கு கேட்டார், இவருடன் கூட்டணிக்கட்சியினர் காங்கிரஸ், மதிமுக, விசிக. இந்தியகம்யூ. மார்க்.கம்யூ, என மனிதநேயமக்கள் கட்சி தமுமுக போன்ற அனைத்துக்கட்சியினரும் பின்தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்.

Tags : Niveda Murugan ,DMK ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்