×
Saravana Stores

பராசக்தி அலங்காரத்தில் தேர் பவனி வீதி உலா

ஊட்டி, மார்ச் 25: ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா துவங்கிய நிலையில், நேற்று கேசயம் வாகனத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஒரு மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் இந்த வீதி உலா நடத்தப்படுகிறது.  இந்நிலையில், இம்முறை கடந்த 19ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 22ம் ேததி முதல் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா அழைத்து வரப்படுகின்றனர். கேடயம் வாகனத்தில் ஸ்ரீ பராசக்தி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். மாரியம்மன் கோயிலில் துவங்கி கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chariot Bhavani Veedi Ula ,Parasakthi ,
× RELATED ஆதிபராசக்தி அருளாட்சி புரியும் 64 சக்தி பீடங்கள்