×

மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்க முடிவு கலெக்டர் கதிரவன் தகவல்

ஈரோடு, மார்ச் 25: மலைப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். ரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் 2 இடங்களில் எண்ணப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை ஆகிய தொகுதிகள் சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியிலும், கோபி, பவானிசாகர் தொகுதிகள் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் காவல் பார்வையாளர் விஜயராவ் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.     

இதைத்தொடர்ந்து பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது: மலைப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதி மற்றும் பதட்ட வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை காவலா–்களை பணியில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாத மலைக்கிராம வாக்குச்சாவடிகளில் வனத்துறையினரின் வாக்கிடாக்கி மூலம் தகவல்கள் பெறப்படும். மலைப்பகுதிகளில் வாக்காளர்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Tags : Kadiravan ,
× RELATED ஈரோட்டில் வாரத்தின் அனைத்து...