×

அருப்புக்கோட்டையில் துவங்கியது முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

அருப்புக்கோட்டை, மார்ச் 25: அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட  முத்துமாரியம்மன்  பங்குனி பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது,முன்னதாக கொடியானது நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ப மேள தாளங்களுடன், வானவேடிக்கையுடன் பள்ளி, கல்லூரி மாணவிகளின் சிலம்பாட்டம், வீரவாள் ஆட்டம் மற்றும் நடனக் குழுவினருடன் இளைஞர்கள் உற்சாகமாக ஆட்டம் ஆடினர். கொடியினை நகர்  வழியாக  வலம் வந்து முத்துமாரியம்மன் கோயிலில் அம்மன் சன்னதியில் பூஜை செய்து கொடியேற்றம் தொடங்கியது.
இக்கொடியேற்றத்தின் போது முதலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்குக் காட்சி தந்தார். பின்னர் கொடிக்கம்பத்திற்கும் மஞ்சள், குங்குமம்  திருமஞ்சனப்பொடி, பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. அதையடுத்து நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் போது, பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி  அம்மனை வழிபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 15 நாட்கள் திருவிழா நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Muthumariamman Temple Panguni Festival ,Aruppukottai ,
× RELATED 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு...