×

சாலை அமைப்பு இன்று சொரிமுத்து அய்யனார் கோயில் செல்ல தடை

வி.கே.புரம், மார்ச் 25:  பாபநாசம் கீழ் அணையில் சாலை வேலை நடக்க இருப்பதால் பக்தர்கள் இன்று சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காரையார் செல்லும் வழியில் பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டிற்கு மேல் பாபநாசம் கீழ்அணை பகுதியில் சாலை போடும் பணி அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை துறை சார்பில் இன்று (25ம்தேதி) நடக்கவிருப்பதால் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் இன்று தடை விதித்துள்ளனர்.இந்நிலையில் ரோட்டின் வேலை முடிய கூடுதலாக ஒருநாள் தேவைப்பட்டால் அன்றைய தினமும் பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடைவிதிக்கப்படும் என்று
வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Sorimuthu Ayyanar temple ,
× RELATED பக்தர்களை குழப்பும் வனத்துறை;...