கூடலூர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கூடலூர், மார்ச் 24:  கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ராகுல் திவாரி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். துப்புகுட்டி பேட்டை, ஐடியல் பள்ளி வளாகம் மற்றும் நியூ ஹோப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் மற்றும் தாசில்தார் தினேஷ்குமார், டிஎஸ்பி ஜெய்சிங் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த பகுதி மக்களிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார்.வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறை குறித்து ராகுல் திவாரி ஆய்வு செய்தார்.

Related Stories:

>