×

திமுக கூட்டணிக்கு ஐஎன்டியூசி ஆதரவு

ஓசூர், மார்ச் 24: ஓசூரில் நடைபெற்ற ஐஎன்டியூசி ஆலோசனை கூட்டத்தில் திமுகவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது.ஓசூரில் நேற்று ஐஎன்டியூசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் முனிராஜ் வரவேற்றார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளீதரன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் பரமானந்த பிரசாத், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்திடில் ஐஎன்டியூசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் பங்கேற்று பேசியதாவது: தொழிற்சங்கத்தை மதிக்கும் மதச்சார்பற்ற திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஓசூர் தொகுதி வேட்பாளர் பிரகாஷ் எம்எல்ஏ, தளி தொகுதி வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ ராமசந்திரன் ஆகியோருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், ஓசூர் பகுதியில் பிஎப் அலுவலகம் அமைக்க வேண்டும்; ரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் கோதண்டராமன், பாரதி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : INTUC ,DMK ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்