×

வெண்ணந்தூர் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு ஆறுதல்

ராசிபுரம், மார்ச் 23: வெண்ணந்தூர் ஒன்றியம், மின்னக்கல் ஊராட்சி வேட்டைகாரன் காடு பகுதியை சார்ந்த திம்மாசி-கமலம் தம்பதியின் வீடு, சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் முழுவதுமாக எரிந்து போனது. இதையறிந்த கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், திம்மாசி - கமலம் தம்பதிக்கு ஆறுதல் கூறினார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி, மின்னக்கல் ஊராட்சி தலைவர் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் விஜயபாஸ்கர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Vennandur ,
× RELATED திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை