×

சேவூர் சந்தையில் அவிநாசி தொகுதியில் போட்டியிடும் அதியமான் வாக்கு சேகரிப்பு

அவிநாசி,மார்ச்23:அவிநாசி ஒன்றியம் சேவூரில் உள்ள சந்தையில் நேற்று அதியமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணியின் அவிநாசி தொகுதி வேட்பாளரும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் மற்றும் தலைவருமான அதியமான் நேற்று அவிநாசி அருகே சேவூர் சந்தைபேட்டை பகுதியில் பொதுமக்களை சந்தித்து,  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பிரசாரத்தின் போது அவருடன் சேவூர் ஒன்றிய திமுக செயலாளர் பால்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, கோவை மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை ரவிக்குமார், விடுதலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்று வாக்குகளை சேகரித்தனர். மேலும் இவருக்கு ஆதரவாக நேற்று அவிநாசி அருகே சேவூர் பகுதியில் மகளிரணி சார்பில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அதியமானை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்காக, மகளிர் அணியினர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். மேலும், அவிநாசி தொகுதி சேவூர் பகுதியில் நேற்று வீடு,வீடாகச் சென்று திண்ணை  பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.
அதிமுக ஆட்சியில் மக்களுக்காக சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது


Tags : Adiyaman ,Avinashi ,Sevoor market ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி