×

மத ரீதியான பதிவு; போலீசார் வழக்கு

 

கோவை, மே 27: கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மீனாட்சி சுந்தரம். இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இந்து முன்னணி அமைப்பின் தொழில் வர்த்தக பிரிவு பொறுப்பாளராக உள்ள வெங்கடேஷ் (35) என்பவர் மத ரீதியாக ஆட்சேபகரமான பதிவுகளை பேஸ்புக்கில் வெளியிட்டது தெரிய வந்திருந்தது. இது தொடர்பாக மீனாட்சிசுந்தரம் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மத ரீதியான பதிவு; போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Meenakshi Sundaram ,Coimbatore Ratnapuri Police Station ,Venkatesh ,Hindu Front ,Facebook ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!