×

கீழ்வேளூர் அருகே வெட்டாறு பகுதியில் மணல் திருடிய 7 பேர் கைது

கீழ்வேளுர், மார்ச் 23: கீழ்வேளூர் அருகே வெட்டாற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 7 பேரை கைது ெசய்த போலீசார் 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு பகுதியில் மாட்டுவண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கீழ்வேளூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், கலியபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது கோகூர் சிவன்கோவில் பின்புறம் உள்ள வெட்டாற்று பகுதியில் மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிந்தது. 7 மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி கொண்டிருந்த 7 பேரை போலீசார் பிடித்தனர்.

பிடிபட்ட ஏழுபேரும் கோகூர் தெற்குதெரு குமார் (38), வடக்குதெரு சுந்தரமூர்த்தி மகன் பிரபு (19), வடக்குதெரு பக்கிரிசாமி மகன் வீரசேகர் (23), வடக்குதெரு ராஜமோகன்(43), தெற்குத்தெரு ஆசைத்தம்பி (37), கோகூர் மெயின்ரோடு ரமேஷ் (35), தொழுவத்துமேடு பழனிவேல் மகன் விக்னேஷ்(19) என தெரியவந்தது. அனைவர்மீதும் போலீசார் வழக்கு கைது செய்தனர். மேலும் 7 மாட்டு வண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்து கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags : Vettaru ,Kizhvelur ,
× RELATED நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள்...