உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றியங்களில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்குசேகரிப்பு

திருச்செந்தூர், மார்ச் 21: திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் உடன்குடி மற்றும் திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் பிச்சிவிளையில் பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து பிச்சிவிளை காமராஜர்நகர் வடக்குத்தெரு, மேலத்தெரு, மறவன்விளை ஆகிய பகுதிகளில் ஒட்டு சேகரித்தார். பின்னர் திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காயாமொழியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காயாமொழி பஜாரில் திரண்டிருந்த பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனையடுத்து தேரிகுடியிருப்பில் பிரசாரம் செய்த அவருக்கு அங்குள்ள பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து தளவாய்புரம், ஆறுமுகபுரம், வன்னியங்காடு, ராணிமகாராஜபுரம், நத்தகுளம், கோயில் விளை, வன்னிமாநகரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

மாலையில் ஆலந்தலையில் துவங்கி சுனாமிநகர், , அமலிநகர், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், ஜெ.ஜெ.நகர், வீரபாண்டியன்பட்டிம்,  சுனாமிநகர், பிலோமிநகரை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு ஜெபஸ்தியார்தெருவில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.  உடன் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட பொருளாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தர் ரொட்ரிகோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மகாவிஷ்ணு, நகர செயலாளர்கள் வாள்சுடலை, கானம் ராமஜெயம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டெண்டுல்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எடிசன், மாவட்டபிரதிநிதிகள் தங்கத்துரை, எடிசன்,

ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், டாக்டர் பாலசுப்பிரமணியஆதித்தன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் தனலெட்சுமி, பஞ். தலைவர்கள் செட்டியாபத்து பாலமுருகன், காயாமொழி ராஜேஸ்வரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிபொன்ராணி, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி தலைவர் வேல் ராமகிருஷ்ணன், விசிக மண்டல பொறுப்பாளர் தமிழினியன், இளஞ்சிறுத்தை பாசறை மாவட்ட செயலாளர் விடுதலைசெழியன், கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>