×

கோவில்பட்டியில் அமமுக காரியாலயம் திறப்பு டிடிவி தினகரன் வெற்றி உறுதி மாணிக்கராஜா பேச்சு

கோவில்பட்டி, மார்ச் 21: கோவில்பட்டியில் அமமுக தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த அக்கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று பேசினார். கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதையொட்டி கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே அமமுக தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடந்தது. அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவபெருமாள் முன்னிலை வகித்தார். கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன் வரவேற்றார். தென் மண்டல அமைப்பு செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான மாணிக்கராஜா, தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தார்.அப்போது அவர், பேசியதாவது: டிடிவி தினகரன் என்றுமே பொய் வாக்குறுதிகளை அள்ளிவிடமாட்டார்.

செய்யக்கூடியதை மட்டும் சொல்லக்கூடியவர். அமமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று நல்லாட்சி தருவார். வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவார்.ஆட்டோ, கார் தொழிலாளர்களுக்கு வங்கிகளில் கடன் வழங்க ஏற்பாடு செய்வார். டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் கோவில்பட்டியில் தனி அலுவலகம் அமைத்து மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். உங்களை நம்பித்தான் டிடிவி தினகரனை கோவில்பட்டியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக செயல்பட்டு இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். டிடிவி தினகரன் வெற்றி உறுதி. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். நீங்கள் அனைவரும் குக்கர் சினத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் கார்த்திக், தேமுதிக மாவட்ட செயலாளர் அழகர்சாமி, வக்கீல்கள் சங்கர்கணேஷ், கார்த்திக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் கயத்தாரில் அமமுக தேர்தல் காரியாலயத்தை தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா திறந்து வைத்தார்.

Tags : Manikkaraja ,DTV ,Dinakaran ,Aam Aadmi Party ,Kovilpatti ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...