×

ஏஎல்எஸ் லட்சுமணனை ஆதரித்து நெல்லை தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

நெல்லை, மார்ச் 21:    நெல்லை டவுன் மேல ரதவீதியில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நெல்லை சட்டமன்றத் ெதாகுதி தேர்தல் காரியாலய திறப்பு விழா நேற்று நடந்தது. தலைமை வகித்த தூத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.பி. ஜெயதுரை திறந்துவைத்தார். நெல்லை சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநகர செயலாளருமான ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ, டிபிஎம் மைதீன்கான் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர்.

இதில் நெசவாளர் அணி மாநில செயலாளர் பெருமாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிப்பாண்டியன், தாழை கே.ஆர். ராஜூ, பகுதி செயலாளர்கள் நெல்லை கோபி என்ற  நமச்சிவாயம், ரவீந்தர், தச்சை. டாக்டர் சங்கர், மாவட்ட பொருளாளர் அருண்குமார்,  மாநகர துணைச் செயலாளர் வள்ளியம்மாள், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.க.மணி,  விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பொன்னையாபாண்டியன்,  பொதுக்குழு உறுப்பினர்  தர்மன், தொமுச இன்பராஜ், கேடிசி பழனியப்பன், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர்  எஸ்.வி. சுரேஷ், தச்சை பகுதி துணைச் செயலாளர் பிபி ராஜா, கலை இலக்கிய  பகுத்தறிவு பேரவை செயலாளர் மேகை செல்வம், முன்னாள் கவுன்சிலர் பாலன் என்ற ராஜா,  பேச்சாளர்கள் நெல்லை முத்தையா, பாம்பு கிருஷ்ணன், வக்கீல்கள் தினேஷ்,  கலைச்செல்வன், மகளிர் அணி ரேவதி அசோக், கிரிஜா குமாரி பங்கேற்றனர்.

 கூட்டணி கட்சிகள் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்  முருகன்,  பொதுச் செயலாளர் சொக்கலிங்க குமார், சிறுபான்மை பிரிவு  முகமது அனஸ் ராஜா, ராஜிவ்காந்தி, அய்யப்பன், தமுமுக மாவட்டத் தலைவர்  ரசூல் மைதீன், மமக மாவட்டச் செயலாளர் அலிப் பிலால், மார்க்சிஸ்ட் மாவட்டச்  செயலாளர் பாஸ்கரன், சுடலைராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் கேஎம்ஏ நிஜாம்,  கல்லத்தியான், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரிசல்சுரேஷ், இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எல்கேஎஸ் மீரான்மைதீன், பாட்டப்பத்து முகமது அலி  உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணா,  கலைஞர் கருணாநிதி, அன்பழகன், ஏ.எல்.சுப்பிரமணியன் ஆகியோரின் படங்களுக்கு  ஜெயதுரை எம்பி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Nellai ,DMK election ,ALS Lakshmanan ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு