×

திமுக வேட்பாளர் மதியழகனை வெற்றி பெற செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, மார்ச் 21:பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டாக்டர் செல்லகுமார் எம்பி பேசினார். பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் எம்பி செல்லகுமார் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கமிஷன் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, ₹5.7 லட்சம் கோடி தமிழகம் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள இந்த சட்டசபைத் தேர்தலின் போது, திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்க அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பர்கூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதியழகன், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அவரை தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். எனவே, அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்பி சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Mathiyalakan ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்