பக்தர்கள் வடம் பிடித்தனர் என்எல்சி ஊழியர் வீட்டில் ₹6 லட்சம் நகை, பணம் கொள்ளை

நெய்வேலி, மார்ச் 21: நெய்வேலி என்எல்சி ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்- 26 ராஜாஜி சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த மாதம் பணி நிறைவு பெறுகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த 10ம் தேதி   சிகிச்சைக்காக உறவினர்கள் காரில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு ராஜேந்திரன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில்  கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டினுள் இருந்த பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் பணம் மற்றும் பட்டுப் புடவைகளை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். தகவல் அறிந்து நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன், ெதர்மல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்  கடலூரிலிருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: