×

பாலாறு பகுதியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு

சிங்கம்புணரி, மார்ச் 21:  சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் பாலாறு பகுதியில் உள்ள தடுப்பணை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆற்று மணலை அதிக அளவில் அள்ளிச் செல்கின்றனர். இதுகுறித்து அணைக்கரைப்பட்டி கிராமமக்கள் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் மற்றும் போலீசில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்ட எல்லையில் சம்பவ இடம் உள்ளதால் இரண்டு தரப்பு அதிகாரிகளும் மௌனம் காத்து வருகின்றனர்.  ஆற்று மணல் அள்ளுவதால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன் மழை வெள்ள காலங்களில் வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் கனிம வளம் சுரண்டப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Balaru ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் தடமில்லாமல்...