×

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

கோவை, மார்ச் 21: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன்  போட்டியிடுகிறார். இவர்  நேற்று கவுண்டம்பாளையம் பகுதி  கழகத்தின் 6 வது வார்டு டி.வி.எஸ் நகர், லூனா நகர், அருணா நகர், அப்பாஸ் கார்டன், வித்யா காலனி மற்றும் 7 வது வார்டுக்கு உட்பட்ட, இடையர்பாளையம், அண்ணா நகர், தேவாங்கு நகர், நீலியம்மன்நகர், இந்திரா நகர், காந்தி நகர் மற்றும் 8 வது வார்டுக்கு உட்பட்ட, மஞ்சீஸ்வரிகாலனி, ஸ்ரீதேவி நகர் ஆகிய இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இப்பிரச்சாரப் பயணத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் மகேஷ்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரேம், மாவட்ட தலைவர் சுபாஷ் சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மதிமுக வின் தொகுதி பொறுப்பாளர் சி.வி.தங்கவேலு மற்றும் திமுக நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கே.எம்.சுந்தரம், ஆர்.சி.தியாகராஜன், ஜவஹர், பகுதி கழகப் பொறுப்பாளர் மதியழகன், வட்ட கழகச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், குமரேசன், வெற்றிவேல் மற்றும் அரசூர் பூபதி, ரவிச்சந்திரன், பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணியம், சசி பாபு, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மைகேல், சண்முகம், மாலதி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், ராஜகோபால், பரமசிவன், ஈஸ்வரமூர்த்தி, வடிவேல் மற்றும் சி.பி.எம் நிர்வாகிகள் துரைசாமி, பெருமாள், ம.தி.மு.க நிர்வாகிகள் விஷ்வராஜ், தியாகராஜன் மற்றும் சி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் கார்த்திக், ஜீவா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாவலன் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் சுரேஷ், ஆனந்த் மற்றும் பிரச்சாரப் பேச்சாளர்கள் லோகநாதன், மாதேஸ்வரன், அப்பாதுரை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Countampalayam ,DMK ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்