×

தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும்: வரலட்சுமி மதுசூதனன் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருநிலம்,கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தீவிர  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், ‘‘காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கருநிலம், தென்மேல்பாக்கம், அஞ்சூர், பட்ரவாக்கம், குண்ணவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார்சாலைகள் முழுவதுமாக  சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், அதிகாரிகளும், அதிமுக அரசும் கண்டுகொள்ளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்படும். அனைத்து  கிராமங்களுக்கும் செங்கல்பட்டு, மறைமலைநக,ர் சிங்கபெருமாள்கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவர புதிய அரசு பேருந்துகள் இயக்கப்படும். தாய்மார்களின் கோரிக்கைகளை ஏற்று 100 நாள் வேலை 150நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என்று திமுக தலைவர் உறுதியளித்துள்ளார். அவர் முதல்வரானவுடன் உங்கள் பகுதியின் நீண்டநாள் பிரச்சனைகள் 100 நாளில் தீர்த்துவைப்பார்.

உதயசூரியன்.சின்னத்தில் நீங்கள் அனைவரும்  வாக்களித்து உங்களில் ஒருவரான என்னை மீண்டும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து தமிழக சட்டமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும்.’’ என்றார். இப்பிரசாரத்தின்போது, அவருடன் திமுக நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம்,  மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட மகளிரணி நிர்வாகி ஈஸ்வரி ஒன்றிய இளைஞர்அணி நிர்வாகி ஏ.சத்யா,ஊராட்சி செயலாளர்கள் கருநிலம்  வேதாச்சலம், ஆஞ்சூர் ராஜேந்திரன்,கொண்டமங்கலம் ஆறுமுகம்,  தென்மேல்பாக்கம் எல்லப்பன்,குண்ணவாக்கம் முகமதுகான்,பட்ரவாக்கம் ராமதாஸ், ஆலப்பாக்கம் திருமலை, பழவேலி பிரதீப்,வல்லம் ஜெயகுமார்,மேலமையூர்கருணாகரன்,செனேரி கோபி, உள்பட  பலர் கலந்துகொண்டனர்.


Tags : Varalakshmi Madhusoodanan ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா:...