×

ஸ்ரீவைகுண்டம் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் காங்., வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உறுதி

செய்துங்கநல்லூர், மார்ச் 20: ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பணி அலுவலகத்தினை திறந்துவைத்து சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் ஆழ்வார்கற்குளம், கால்வாய், வல்லகுளம், தெற்கு காரசேரி உள்ளிட்ட பகுதிகளில் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் அவரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து புளியங்குளம் சென்ற ஊர்வசி அமிர்தராஜ் அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்னர் கொங்கராயகுறிச்சி, கிளாக்குளம், அரசர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காமராஜர் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சேரகுளம் ராமானுஜம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆறாம்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். ஊர்வசி அமிர்தராஜ் செல்லும் இடங்களில் எல்லாம்  பெண்களும் பொதுமக்களும் திரளாக ஆர்வத்துடன் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அடிமை ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் நலப்பணிகளில் அக்கறை இல்லாத சுயநல ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக வருகிற சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

மக்கள் மாற்றத்தை விரும்பி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என நினைக்கின்றனர். பிரசாரத்திற்கு செல்லும் இடம் அனைத்திலும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் அவல நிலைகளை அறிய முடிகிறது. முறையான சாலை வசதி, போக்குவரத்து வசதி, அத்தியாவசியமான நீராதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையே உள்ளது. வைகுண்டம்் எம்எல்ஏவாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன்  தமிழகத்திலேயே முன்மாதிரி முதன்மை தொகுதியாக வைகுண்டம் தொகுதியை மாற்றி காட்டுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், கருங்குளம்  திமுக ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், வைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, பொருளாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் எடிசன், பொதுச்செயலாளர் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், செயலாளர் இசை சங்கர், செய்தி தொடர்பாளர் மரியராஜ் , கருங்குளம்  காங்கிரஸ்வட்டார தலைவர்   புங்கன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தார்த்,  திமுக ஒன்றிய கவுன்சிலர் கரீம், காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர்கள் பெருமாள், பன்னீர்செல்வம், வட்டார பொருளாளர் நாயனார், திமுக கிளைச் செயலாளர்கள் துரைராஜ், முருகேசன், தனராஜ், கண்ணதாசன் கட்சியின் கருங்குளம் ஒன்றிய பொருளாளர் கண்ணன், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Tags : Urvasi Amirtaraj ,Srivaikuntam ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தால்...