×

மேலப்பாளையம் பள்ளிவாசலில் பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு வண்ணார்பேட்டையில் வீதி, வீதியாக பிரசாரம்

நெல்லை, மார்ச் 20: பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்தவர்களிடம் நேற்று ஓட்டு கேட்டார். வண்ணார்பேட்டை, இளங்ேகா நகர் பகுதிகளில் மாலையில் வாக்கு சேகரித்தார். பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு, தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, சிறுபான்மை மக்களுக்கு அரணாக அதிமுக செயல்படுவதை சுட்டிக் காட்டியதோடு, அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு தீட்டப்பட்ட திட்டங்களையும் கூறி ஓட்டு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்பிக்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.ஆதித்தன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப்ஜான், மாவட்ட துணை செயலாளர் கவிதா, மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹயாத், இளைஞரணி மாநில நிர்வாகி வை சின்னத்துரை, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை, வக்கீல் பாலசுப்பிரமணியன், நத்தம் வெள்ளப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி மாணவரணி செயலாளர் ஜான்சன், சி.பா.முருகன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், பீர், நல்லபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜெரால்டு நேற்று மாலையில் வண்ணார்பேட்டை, இளங்கோ நகர் பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். பிரசாரத்தில் பகுதி செயலாளர் சிந்து முருகன், வட்ட செயலாளர்கள் வண்ணை கணேசன், பாலு, டாஸ்மாக் ஆனந்த், கேடிசி சின்னபாண்டி, பூக்கடை சப்பாணிமுத்து, இளங்ேகாநகர் செல்லப்பா, தங்கபிச்சையா, பாமக மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணி துணை தலைவர் அந்தோணிராஜ், சாம் பாபு, தமாகா மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், மண்டல தலைவர்கள் பிலால், அருள், பாறைசண்முகம், வேல்முருகன், தமிழர் விடுதலை களம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெகன்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Melappalayam ,Washermenpet ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...