×

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த நபர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட நிரவாகக்குழு, மாநிலக்குழு கூட்ட முடிவின்படி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிவகங்கை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக குணசேகரன் தேர்வு செய்யப்பட்டு போட்டியிடுகிறார்.

கட்சியின் இம்முடிவை மீறி சிவகங்கையை சேர்ந்த விஸ்வநாதன் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கை காரணமாக விஸ்வநாதன் என்பவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவது என கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Communist Party ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்