×

தாமிரபரணி-வைப்பாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வருவோம் ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

ராஜபாளையம், மார்ச் 19: சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திட்டங்களை நான்தான் கொண்டு வந்தேன் என்பது சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. ‘கொண்டால் நகரம்’ கூட்டு குடிநீர் திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன். ராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை நான்தான் பூமிபூஜை போட்டு துவக்கினேன். டெங்கு காய்ச்சல் பரவிய நேரத்தில் ராஜபாளையத்தில் தங்கி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டேன். தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வருவோம். இதன்மூலம் ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி சட்டமன்ற தொகுதிகள் மிகவும் வளமான தொகுதியாக மாறும். குடிநீர் பிரச்னை இருக்காது. ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து கண்மாய்கள், நீர்பிடிப்பு பகுதிகள் தூர்வாரப்பட்டதால் இன்று தண்ணீர் நிரம்பி வழிகிறது. ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து கட்சியிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். மாற்று கட்சியை சேர்ந்த நண்பர்களும் எனக்கு வாக்களிப்பார்கள். அனைத்து சமுதாய மக்களும் எனக்காக வாக்கு சேகரிக்கின்றனர். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவேன்’’ என்றார்.

Tags : Tamiraparani ,Vaiparu ,Minister ,Rajendrapalaji ,Rajapalayam ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...