×

திமுக கூட்டணிக்கு ஜமா அத் ஆதரவு

இளையான்குடி, மார்ச் 19: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கே எங்கள் வாக்கு என ஜமா அத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளையான்குடி ஐஎன்பிடி பள்ளிவாசல் பல்நோக்கு அரங்கில், சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமா அத் மற்றும் சிவகங்கை மாவட்ட ஜமா அத் கூட்டம் நேற்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட டவுன் ஹாஜி முகமது பாரூக், மாவட்ட உலமா சபை தலைவர் முகமது ரிழா ஆலிம், மாவட்ட ஐக்கிய ஜமா அத் தலைவர் நாடா அன்வர், கவுரவ தலைவர் இப்ராஹிம் பைஜி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ஜமா அத் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Jamaat ,-Islami ,DMK ,
× RELATED பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம்