×

பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர பிரசாரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 18: பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன், நேற்று பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி, பாகிமானூர், மஜீத்கொல்லஅள்ளி, ஐகுந்தம்கொத்தப்பள்ளி, ஐகுந்தம், தொகரப்பள்ளி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் எண்ணற்ற திட்டங்களை தலைவர் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினால் மட்டுமே சிறந்த தமிழகத்தை உருவாக்க முடியும். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சேர நான் உறுதுணையாக இருப்பேன். இந்த தொகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சாலைகள் சீரமைத்து தரப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், முன்னாள் எம்பி சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, கிருபாகரன், நெடுஞ்செழியன், சீனிவாசன், சரவணன், நவாப், பிரபாகரன், ரூபேஷ், ராஜதுரை, அருண், சீதாராமன், மாதையன், ரகுநாதன் மற்றும் திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Parkour ,DMK ,Mathiyalakan ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்